சீறும் இயற்கை
முற்றும் கலிகாலம்
முறைதவறும் பருவங்கள்
செயற்கை வினைகளால்
சீறும் இயற்கை
விதைப்பில் பொய்த்து
அறுவடையில் பேய் மழை
உருகும் பனிப்பாறை
உயரும் கடல் அலைகள்
நுண்ணுயிர் நோயால்
நொடிக்கும் வாழ்க்கை
பசியிருக்கும் போது
பணமில்லை உழைத்து
பணம் சேர்த்து போது
பசியில்லை என்றால்
என்னாகும் வாழ்க்கை
Comments
Post a Comment